தற்போதைய செய்திகள்

பயணிகள் ரயில் டிக்கெட் விலையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு

பயணிகளின் ரயில்களில் டிக்கெட் விலையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

DIN

பயணிகளின் ரயில்களில் டிக்கெட் விலையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -

ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் டிக்கெட் விலைகளில் பத்து சதவிகிதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பத்து சதவிகித டிக்கெட்டுகளுக்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கூடுதலாக பத்து சதவிகித கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் ரயில் கட்டணங்கள் விமான கட்டணங்களுக்கு இணையாக வசூலிக்கப்படும். தட்கல் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தற்போதுள்ள முறையே கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு நாளை மறுதினம் அமலாகவுள்ள நிலையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 459 என்ற மோசமான நிலையை எட்டியது!

“சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

மெஸ்ஸியுடன் ராகுல்காந்தி! | Hyderabad

WWE-யிலிருந்து ஓய்வுபெற்றார் John Cena!

இந்து அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

SCROLL FOR NEXT